டெங்கு; திருமலையில் 06 வயது சிறுமி பலி டெங்கு காய்ச்சலால் திருகோணமலையில் மேலும் ஒரு மாணவி உயிரிழந்துள்ளார். உதயராஜன் அஞ்சனா எனும் ஆறு வயதுடைய திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முதலாம் தர மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சிறுமியுடன் இதுவரை திருகோணமலை மாவட்டத்தில் மொத்தம் 15 பேர் உயரிழந்துள்ளதாக திருகோணமலை சுகாதார சேவை நிலையம் தெரிவிக்கிறது. திருகோணமலை பிரதேச சுகாதார பிரிவில் இன்று வரை 440 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ... Read More