யாழ் மீசாலையில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு யாழ்ப்பாணம் மீசாலை ரயில் நிலையத்திற்கு அருகில், ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவத்தில், கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரம் ஞானயுகன் (வயது – 38) என்பவரே உயிரிழந்துள்ளார். மீசாலை ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள புத்தூர் சந்தியில் ரயில் கடவையை, மோட்டார் சைக்கிளுடன் கடக்க முற்பட்ட போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. சடலம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக, அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். விபத்து இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பான ... Read More