தொடரும் புகையிரத பணி பகிஸ்கரிப்பு போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் இன்று (7)புகையிரத சாரதிகள் சங்கம் மேற்கொண்ட கலந்துரையாடலானது தோல்வியில் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமது பணிபகிஸ்கரிப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என புகையிரத சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது குறித்த பணிபகிஸ்கரிப்பால் பிரயாணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை கவனத்தில் கொண்டு பணிபகிஸ்கரிப்பை கைவிடுமாறு கோரியதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ்.விதானகே தெரிவித்துள்ளார். எனினும் அமைச்சின் செயலாளருடன் மேற்கொண்ட கலந்துரையாடல் தோல்வியில் முடிவடைந்துள்ளதால் தமது பணிபகிஸ்கரிப்பு தொடரும் என புகையிரத சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ... Read More