28பிரபல வர்த்தகர் முஹமட் ஷியாம் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன உயர் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இணங்காணப்பட்டுள்ளார்.

அத்துடன் வாஸ் குணவர்த்தனவின் மகன் மற்றும் நான்கு பொலிஸ் கான்ஸ்டபில்களும் குற்றவாளிகளாக இணங்காணப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் மற்றும் நான்கு பொலிஸ் கான்ஸ்டபில்கள் ஆகிய ஆறு பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மொஹமட் சியாமை கொலை செய்தமை, அதற்கு சதித் திட்டம் தீட்டியமை, கடத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்ட மா அதிபரால் இவர்களுக்கு எதிராக குறித்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு (27.11.2015)அறிவிக்கப்படும் என்று கொழும்பு உயர் நீதிமன்றம் கடந்த ஒக்டோபர் மாதம் 12ம் திகதி அறிவித்திருந்தது.

இந்தநிலையில் குறித்த ஆறு பேரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து கொழும்பு உயர் நீதிமன்றம் 27.11.2015 உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு 802 பக்கங்களைக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.