தமிழ் அரசியல் கைதிகளின்விடுதலை வேண்டி கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவனsenthooran-1 ரயிலின் குறுக்கே பாய்ந்து தன் னுயிரை மாய்த்த சம்பவம் பாரிய சமூக அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

கனவுகளுடன் இலட்சியங்களுடன் வாழ்வு ஆரம்பிக்கும் தருணத்தில் இந்த மாணவனின் மரணம் பெரும் துன்பியலாகும்.

அவரது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் இந்த மாணவனின் மரணம் பேரிழப்பாகும்.

எமது சமூகத்தின் அவல நிலையை இந்த மரணம் உணர்த்தி நிற்கிறது.

இத்தகைய மரணங்களை தடுக்கமுடியாத கையறு நிலையில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம்.

அரசியல் கைதிகளின் விடுதலை இழுபட்டுச் செல்வதும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்வதும் வேறு விபரீதங்களுக்கு இட்டுச் செல்லும் .

ஜனநாயக கனவுகளுடன் அனைத்து இனசமூகங்களிலும் தெரிவு செய்யப்பட்ட அரசு மக்களின் நம்பிக்கைகளை எதிபார்ப்புக்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த மாணவனின் உயிர்துறப்பு அரசியல்கைதிகளின் போராட்டங்கள் தமிழ் சமூகத்தின் அமைதியற்ற நிலை இவற்றை புரிந்து கொண்டு துரிதமாக செயற்படவேண்டும்.

சமூத்தில் நிலவும் பாரிய மன அழுத்தம் தொடர்பில் அலட்சியமாக இருந்து விடமுடியாது.

ஆனால் இத்தகைய அவலங்களை மாணவப் பருவ அநியாய உயிர்துறப்புக்களை தவிர்ப்பதற்கு- இளம் சமுதாயத்திற்கு உதவுவதில் அரசு- தமிழ் அரசியல் தலைமை -கல்வியாளர்கள் விழிப்புணர்வுடன் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும். இத்தகைய துன்பியல் நிகழ்வுகள் இனிமேலும் நிகழவேண்டாம் . இந்த உயிர் துறப்பு முன்னுததாரணமாகவும் இருக்கக் கூடாது.

சமூகம் தொடர்ந்து மன அழுத்தத்தினுள் வாழமுடியாது.

இராஜேஸ்வரன் செந்தூரனுக்கு(18) எம் அஞ்சலியைச் செலுத்துவதோடு அன்னாரின் குடும்பத்தினருக்கும் அவரது சகமாணவர்கள் ஆசிரியர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்ஙனம்

தி.ஸ்ரீதரன்

செயலாளர்

பத்மநாபா ஈபிஆர்எல்எப்