north_ministersயாழ்.மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலமைத்துவக் குடும்பங்கள், மற்றும் போரினால்  விதவைகளாக்கப்பட்டவர்கள் 24867 பேர் வாழ்ந்துவருகின்றனர்.

இவர்களில் 40 வீதமானவர்கள் எவ்விதமான மாத வருமானமும் இல்லாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மிகுதி 47 வீதமானவர்கள் சுயதொழில் செய்வதுடன், 13 வீதமானவர்கள் மாதச் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

மேற்கண்டவாறு நேற்றய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு யாழ்.மாவட்டத்தின் தேவைகள்  மற்றும் பிரச்சினைகள் குறித்து மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடலின்போதே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

குறித்த கலந்துரையாடலில் மேலும் குறிப்பிடப்படுகையில், யாழ்.மாவட்டத்தில் 24867  பெண் தலமைத்துவ மற்றும் போர் விதவைகளுடைய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 40 வீதமானவர்கள் மாதவருமானம் எதுவுமே இல்லாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும் 47 வீதமானவர்கள் மாதாந்த வருமானத்திற் காக சுயதொழிலை செய்து கொண்டிருக்கின்றனர். 13 வீதமானவர்கள் மாதாந்தம் சம்பளம் பெறு ம் குடும்பங்களாக இருக்கின்றன.

எனவே இவர்களுடைய வாழ்வாதார மேம்பாட்டுக்கான வழிகள் செய்யப்படவேண்டும். என நேற்றய கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. மேலும் யாழ்.மாவட்டத்தில் பாடசாலை இடைவிலகல், சிறுவர்களை வேலைக்கமர்த்துதல், இளவயது கர்ப்பம் ஆகியன குறைந்திருப்பதாகவும் நேற்றைய கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

இந்த விடயம் தொடர்பாக நேற்று கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி பாடசாலையை விட்டு இடைவிலகும் மாணவர்களுடைய எண்ணிக்கை 2012ம் ஆ ண்டு 576ல் இருந்து 2013ல் 182 ஆக குறைந்து, 2014ல் 123 ஆக குறைவடைந்து 2015ம் ஆண்டில் 26 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதேபோன்று சிறுவர்களை வேலைக்கமர்த்து ம் தொகையும் 2013ல் 54ஆக இருந்து 2015ல் 11 ஆக குறைந்துள்ளதாகவும், இளவயது கர்ப் பங்கள் 2012ல் 419 ஆக இருந்து, 2015ல் 149 ஆக குறைவடைந்துள்ளதாகவும் மேற்படி தகவல்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

மேலும் யாழ்.மாவட்டத்தில் பாரிய பிரதேசத்தை உள்ளடக்கிய பிரதேச செயலகங்களை இரண்டாக பிரிக்குமாறும், தற்போது பிரதேச சபைகளாக உள்ள 5 பிரதேச சபைகளை நகரசபைகளாக தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு அவர் குறிப்பிடுகையில், யாழ்.மருதங்கேணி பிரதேச செயலகம், மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகம் ஆகியன பாரியளவு பகுதியை உள்ளடக்கிய பிரதேச செயலகங்களாக இருக்கின்றன.

இதனால் மக்கள் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்நிலையில் குறித்த இரு பிரதேச செயலகங்களையும் தலா இரு பிரதேச செயலகங்களாக பிரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். என்ற கோரிக்கையினை நாங்கள் கேட்டிருக்கின்றோம். மேலும் நல்லுர், மானிப்பாய், சுண்ணாகம், சங்கானை, நெல்லியடி ஆகிய பிரதேச சபைகள் நகரசபைகளுக்குரிய தகுதிகளைக் கொண்டிருக்கும் பட்சத்தில் அவைகளை நகரசபைகளாக தரம் உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். எனக்கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.

இன்றைய கூட்டம் மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி தேவை கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து அறிந்து கொண்டு மத்திய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தின் விவாத ம் நடைபெறும்போதும், குழு கூட்டங்களின்போதும் இவை குறித்து பேசி மாவட்டத்திற்குரிய வசதிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். என்ற அடிப்படையிலேயே இன்றைய கூட்டத்தை நாங்கள் நடத்தியிருக்கின்றோம். அந்தவகையில் இந்த விடயம் மட்டுமல்லாமல் பல்வேறு தேவைகள் தொடர்பாகவும் குறிப்பாக கல்வி, சுகாதாரம், மற்றும் வீதிகள் , மீள்கு டீயேற்றப்பட்ட பகுதிகளின் தேவைகள் தொடர்பாகவும், நாங்கள் கோரிக்கைகளை விடுத்திருக்கின்றோம் என மாவட்டச் செயலர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.