anne-frankதனது 15 வயதில் 1945 நாஜீவதைமுகாமில் அவள் மரணித்தாள். 1942 முற்பகுதியில் தனது சினேகிதியின் இளைய சகோதரிக்கு எழுதிய கவிதை வரிகள்  70வருடங்கள் ஓய்ந்து  கிடந்த பின்னர் விழித்திருக்கிறது.

அன்னி பிராங்கின் டயறி உலகப்பிரசித்திபெற்றது. நாஜிகள் அன்னி குடும்பத்தை வேட்டையாடியபோது தவறிய டயறி 1945 இல் சோவியத் படைகளால் வதைமுகாம் கைப்பற்ற பட்ட பிறகு மீண்டு வந்த தந்தை ஓட்டோ பிராங்கிடம் யேர்மனிய நண்பர் ஓருவர் அந்த டயறியை பாதுகாப்பாக வைத்து கைளித்தார்.

1947 இல் அது புத்தகமாக வெளிவந்தது உலகளாவிய அளவில் அந்த  டயறி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இன்றுவரை அதிர்வலைகளை ஏற்படுத்துவது.

பூசிக்கின் தூக்கு- மேடைக்குறிப்பு நேரு இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள்- ரஜனியின் முறிந்த பனை  நினைவலைகளில்

தனது வலிமையான எழுத்தால்  அவலமானதும் கொடூரமான வாழ்க்கை அனுபவத்தால் அன்னியை உலகம் அறியும்

யூதர்கள் டேவிட் நட்சதிரக் குறியீட்டை தமது வீடுகளுக்கு முன்னால் கீறிவைக்கவேண்டும் என்று பேர்லினில் யூதர்களுக்கு நாஜிகளின் உத்தரவு வந்து 2 நாட்களின் பின் அந்த கவிதை நெதர்லாந்தில் எழுதப்பட்டது. எழுதப்பட்டு 3 மாதங்களில் 1942 இல் எல்லா யூதக் குடும்பங்களையும் போல அவள் குடும்பத்துடன்  தலைமறைவாகிறாள். நெதர்லாந்து நாஸிகள் வசம் ஆனதன் பின் அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. 1945 மார்ச்சில் நாஜிக்ளனி வதைமுகாமில் அவள் மரணித்தாள்.

கவிதை மிக மிக சாதாரண வரிகள் தான். காலகட்டத்துடன் அச்சிறுமியின் வரலாற்றுப் பாத்திரத்துடன் தொடர்பு படுத்திப்பார்க்கும் போதுதான் அதன் கனதி புரியும்.

உலகமனச்சாட்சியின் முகத்தில் அறைகிறது அந்த சிறுமியின் சின்னஞ்சிறிய டயறி.

மனிதர்கள் சமத்துவமானவர்கள். யுத்தம் வதை இனவெறி பால் சமத்துவமின்மை தொடர்பான விடயங்களும் சாதாரண சின்னச்சின்ன விடயங்களும் இரத்ததத்தை உறையவைக்கும் பாசிச கொடுமைகளும் அக்கால உலக இயக்கப்போக்கும் யூதாக்ளுக்கு நேர்ந்த பாடசாலைகளில் வீதியில் வாழ்வில் நிகழ்ந்த கொடுமைகள் பிஞ்சுமனங்களில் ஏற்படுத்திய பாதிப்புக்களை ஒரு சமூகத்தின்கையறு நிiலையை அவமானம் சமூகப் பாதுகாப்பு எதுவுமற்ற நிலையை பதிவு செய்திருந்தார்.

சிவரமணி செல்வி போன்ற கவிஞர்கள் நினைவுக்கு வருகிறார்கள்

அவர்களும் அவாக்ளைப்போன்று பல்லாயிரம் பேரும் வாழ அனுமதிக்கப்படவில்லை.

எமது சமூகத்தில் உள்ளிருந்த பாசிசம் பற்றி கேள்விகேட்காமல் அல்லது மௌனமாக கடந்து செல்லும் போக்கே இன்று வரை நிலவுகிறது. விதிவிலக்கு மீறல்கள் இருந்தாலும் பொதுப்போக்கு அதுதான்.

துரதிஸ்டம் என்னவென்றால் சேகுவேரா உருவரை தொடக்கம் அன்னி பிராங் கவிதை வரை எல்லாம் விற்பனைப்பண்டங்கள் ஆகியிருக்கின்றன. கவிதை 148ஆயிரம்  டாலர் ஏலத்தில் போயிருக்கிறது. விற்றவரை குறை சொல்லவில்லை இன்றைய சமூக பொருளதார உறவு நிலை அது தான்..

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ் ஏங்கல்ஸ் உரைத்தது போல எல்லா மனித உறவுகளும் வெறும்பணப்பட்டுவாடாவாக மாறியுள்ளன.

எமது சிறார்களின் பாடப்புத்தகங்களில் அன்னி பிராங் போன்ற ஆழுமைகள் இடமபெற வேண்டும்.
அன்னி பிராங்கின் அந்த வரிகள் ஆங்கிலத்தில்

 

“If you did not finish your work properly,anne

And lost precious time,

Then once again take up your task

And try harder than before.

If others have reproached you

For what you have done wrong,

Then be sure to amend your mistake.

That is the best memory one can make.”

தோழர் சுகு- ஸ்ரீதரன்