15390793_10209624965852202_884422605412741052_nதமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சாதாரண மக்களின் பேரபிமானம் மிக்கதலைவராக திகழ்ந்தவர். பாரதியின் கனவுப்பெண் “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்டபார்வை திமிர்ந்த ஞானச்செருக்கு” கொண்டவராக பிரகாசித்தார்.
தமிழகத்தின் கோடிக்கணக்கான மக்கள் குறிப்பாக பெண்கள் தமது குடும்பத்தில் தாயாக மூத்த சகோதரியாக கருதினர்.
தமிழக ஆணாதிக்க சிந்தனையின் மீதான நிறுத்த முடியாத மீறலாகவே அவர் எழுச்சியுற்றார்.
அவருடைய வர்க்க பின்புலத்திற்கு முரணாக அவர் சமூகத்தின் மிகச் சாமானிய மக்களிடம் ஈடுபாடு கொண்டிருந்தார்.
கோடிக்கணக்கான பெண்கள் தாம் ஆதரவற்றுப்போய்விட்டதாக ஏக்கமுற்றிருக்கிறார்கள்.
இது வெறும் மாயக் கவாச்சி அல்ல. சாதாரண மக்களின் பிரச்சனைகளை அவர்களின் மொழியை மனதை அவரளவுக்கு புரிந்து கொண்ட அரசியல் வாதிகள் இன்றைய தமிழகத்தில் அரிதே.
சுதந்திரப் போராட்டக்காரர் தில்லையாடி வள்ளியம்மை ,கவி பாரதி பொதுவுடைமை கட்சிக்காரர்கள் தந்தை பெரியார் ,காமராஜர் அண்ணாத்துரை எம்ஜிஆர் ஜீவானந்தம், கலியாணசுந்தரம் ,ராமமூர்த்த்தி மாபொசி , ஜெயகாந்தன் -ராஜம் கிருஸ்ணன் போன்ற இலக்கிய உலக ஆழுமைகள் எம் மத்தியில் வாழும் கலைஞர் தோழர் நல்லக்கண்ணு தா பாண்டியன் ராமகிருஸ்ணன் ,திருமாவளவன் போன்ற ஆளுமைகள் இன்னும் இங்கு சொல்லப்படாத பலர் தமிழகத்தை அலங்கரித்திருந்தாலும்
அகில இந்திய அளவில் இந்திராகாந்தி என்ற ஆழுமை உருவாகி இருந்தாலும் தமிழகம் ஆணாதிக்க நிலமானிய சமூக செல்வாக்கினுள்தான் இருந்தது.
அதையெல்லாம் உடைத்துக் கொண்டு தமிழக அரசியலில் இருந்த பொதுவான வன்முறை அராஜகம் பெண்களுக்கெதிரான வன்முறை தூற்றுதல்கள் இழிசொற்கள் பழி சொற்கள் நிந்தனைகள் எல்லாவற்றையும் கடந்து பெரும் ஆழுமையாக எழுச்சி பெற்றவர் ஜெயலலிதா. எம்ஜிஆரின் இறுதி ஊர்வல வண்டியில் அவர் இழிசொற்களால் அவதூறு செய்யப்பட்டு தள்ளி விழுத்தப்பட்டது. தமிழக சட்டசபையில் அவருடைய ஆடையை பிடித்து இழுத்தது உள்ளிட்ட எல்லா அவமானங்களிலும் இருந்தே ஆணாதிக்க அகங்காரம் திமிர் தனச் சூழல் மத்தியிலேயே அவருடைய பல்வேறு முரண்களையும் நடத்தைகளையும் எச்சரிக்கை உணர்வுகளையும் அவதானிக்க வேண்டும். நேர்த்தியாக ?எதனையும் அவர் கரடுமுரடான தரையில் மேற் கொள்ள வேண்டி இருந்தது. அவர் மிகவும் புத்திசாதுரியமும் துணிச்சலும் மிக்க தலைவர்.

தமிழகத்தை பொறுத்தவரை பெண்களின் நிலையில் குறிப்பிடத் தகுந்த மறுமலர்ச்சி ஏற்பட்டதெனலாம்.
இந்தியாவின் புகழ்பெற்ற பொருளியல் அறிஞர் அமர்த்தியாசென் கல்வி, சுகாதாரம் ,சிறுவர் போசாக்கு பெண்களின நிலைமை சமூக பாரபட்சங்களை அகற்றுதல் தொடர்பில் தென்னிந்திய மாநிலங்களான கேரளா தமிழகம் மற்றும் இமாச்சால் முன்நிலையில் இருப்பதையும் இது போன்ற விடயங்களில் தென்னாசிய நாடுகள் என்ற வகையில் வங்கதேசம் இலங்கை நாடுகள் முன்னிலையில் இருப்பதையும் புள்ளிவிபரங்களுடன் ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டினார். “ஒரு உறுதியற்ற மகத்துவம்” என்ற நூலில் அவர் இதனை விலாவாரியாக எழுதியுள்ளார்.
இதில் ஜெயலலிதா அவர்களின் அழுத்தமான பங்களிப்பும் உண்டு.
இந்திய அளவில் சமூக நீதி இட ஒதுக்கீடுகள் நிகழ்தாலும் தமிழகத்தில் அதனை 60 வீதத்துக்மேல் உயர்த்தியவர்.
பெண்களுக்கு உள்ளுராட்சி அமைப்புக்களில் 50 வீதம் என்ற திட்டத்தை கொண்டுவந்தவர்.
பெண்கள்கள் சுய உதவிக்குழுக்கள்
மகளிர் காவல் நிலையங்கள்
வீட்டில் சமூகத்தில் பெண்களுக்கு ஒரு கம்பீரத்தை ஏற்படுத்த முயன்றார்.

சமையலறைச் சாதனங்கள் ,
பாடசாலைகள் கல்லூரி மாணவர்களுக்கான மடிக்கணனிகள் சைக்கிள்கள் கோடிக்கணக்கில்
விலையில்லா அரிசி ,அம்மா உணவகம,; அம்மா மருந்தகம் , அம்மா குடிநீர் என வறியமக்களுக்கு நியாய விலையில் கிடைக்கச் செய்ய முயன்றார்.
அனாதரவான குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான தொட்டில் குழந்தை திட்டம் ,ஏழைப்பெண்களுக்கான திருமண உதவி
தமிழகத்தின் குடிநீர் மற்றும் விவசாயிகளுக்கா நீர் வள உரிமைகளை வென்றெடுக்க பாதுகாக்க இடையறாது பாடுபட்டவர்.
கோடிக்கணக்கான விழிம்பு நிலை மக்கள் தங்களின் பாதுகாப்பு பலம் என்று அவரை கருதினர்
ஈழத்தமிழர் உரிமைகள் தொடர்பில்; அவர் தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருந்தார். ஜனநயாக உள்ளடக்கம் மனிதஉரிமைகள் பாதுகாப்பு தொடர்பில் தெளிவும் கரிசனையும் கொண்டிருந்தவர்
ஈழ ஜனநாயவிரோத பாசிச அரசியலை அவர் என்றும் ஆதரித்ததில்லை.
குடும்ப பின்புல ஆன்மீக மரபுகள் மற்றும் திராவிட இயக்க பாரம்பரியங்களின் கலவையாக அவரது செயற்பாடுகள் பிரதானமாக அமைந்தன.

6372-2-7505ea6c7d816a4e234abc1d4cfcc080
அவர் குடும்ப பின்புல செல்வாக்கில் இருந்து எழுந்தவர் அல்ல. அவருடைய சொந்த ஆழுமை சமூக செயற்பாடு என்பன குறிப்பிடத்தகுந்தளவு அவரது எழுச்சியில் பங்களித்திருக்கின்றன.
அன்னாருக்கு எம் இதய அஞ்சலிகள். தமிழக- இந்திய மக்களின் துயருடன் எம்மையும் இணைத்துக் கொள்கிறோம்.
சுகு-ஸ்ரீதரன்
தமிழர் சமூக ஜனநாயக கட்சி(SDPT)