jaffna_death08article_1481965939-aaசாவகச்சேரி விபத்தில் 3 பெண்கள் உட்பட 11 பேர் அநியாய உயிரிழப்பு. 16 பேர் காயம்
அராஜகமும் அகங்காரமுமான போகுவரத்து மற்றும் சேவைத்துறைகள்
உணர்ச்சி வசப்படுத்தும் வெற்று சந்தர்ப்பவாத போதை சொல்லலங்கார அரசியல் முன்னினிலைப்படுத்தபட்டுள்ளதால் சமூகப் பாதுகாப்பு அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் இரண்டாம் பட்சமாக்கபட்டுள்ளன.
உதாரணமாக குடி நீர் மாசடைந்தததைப்பற்றி பல வருடங்களாகப் பேசி வருகிறோம் என்ன செய்யப்பட்டிருக்கறது என்பது பதில் இல்லாத கேள்வி.
நாளும் பொழுதும் விபத்துக்கள் அநியாய மரணங்கள் நிகழ்கின்றன. இதற்கான பாதுகாப்பான பயண ஏற்பாடுகள் என்ன என்பது பதில் இல்லாதகேள்வி.
வேகமான வாகனங்களுக்கான வீதிகளில் பாதசாரிகளுக்கான சைக்கிள் காரர்களுக்கான பாதைகளே கிடையாது.
பொதுப்போக்குவரத்து -பாதசாரிகள் இரண்டாம் பட்சமாக கருதும் மனநிலை
ஒலி எழுப்பி வரும் அமைச்சர்கள் அதிகாரிகளின் படையினரின் வாகனங்களுக்கு முன்னுரிமை என்ற மனநிலை பழக்கதோசம் சாதாரணமாக போக்குவரத்து வாகன சாரதிகள் தமக்குத்தான் முன்னுரிமை என்ற அகங்கார மனநிலை ஓய்வின்மை அலட்சியம் பொறுப்பின்மை என்பன பாரிய விபத்துக்களுக்கு காரணமாயமைந்துவிடுகின்றன . இலங்கையின;;; போக்குவரத்து வீதி ஒழுங்கு என்பது போட்டியும் கெடுபிடியும் அதிகாரத்துவ மனநிலையும் கொண்டதாக காணப்படுகிறது
போக்குவரத்து விபத்துக்கள் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் அதிகரிக்கப்படவேண்டும்.
பாதுகாப்பான பொதுப் போக்குவரத்தும் அதிகரிக்கப்பட வேண்டும். இதனைச் செய்ய முடியாதென்றில்லை.
எமது வைத்தியசாலைகள் இன்னும் மனிதநேயமுள்ளவையாக மாற்றப்பட வேண்டியிருக்கின்றன. சேவைகள் விஸ்தரிக்கபட வேண்டியிருகின்றன. இலவச அல்லது குறைந்த செலவிலான வைத்தpயம் உறுதிப்படுத்தபடவேண்டியருகிறது.
பொலிஸ்நிலையங்களில் வைத்தியசாலைகளில் அதேபோல் கிராமசேவகர் காரியாலயத்தில் கச்சேரியில் பிரதேச செயலகங்கள் சபைகளில் அமைச்சுக்களில் மனித கண்ணியம் உறுதிப்படுத்தபட வேண்டியிருகிறது.
எங்கும் ஒரு விதமான கெடுபிடி நிலவுகிறது.
இவற்றில் பெரும்பாலானவற்றை தீர்ப்பதற்கு பணம் தேவையில்லை.
சுகு-ஸ்ரீதரன்