3c11a88d8ad5789efeaf37b12017926c_Lநேரடியாக நிர்வாகத்தில் பொதுமக்களை இணைத்துக் கொள்ளும் வகையில் ‘கிராமிய அரசாங்ம்’ எனும் கொள்கையை நடைமுறைப்படுத்த சமகால நல்லாட்சி அரசு தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது,  நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கஜந்த கருணாதிலக கருத்து தெரிவிக்கையில் ,
கிராமிய அரசாங்க எண்ணக் கொள்கைப் பத்திர வரைபும் மற்றும் அலுவல் தொடர்பான விடயங்களை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற குழுக்களின் கருத்துக்களும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.
 தலைமை அமைச்சர் அலுவலக இணையத்தளத்தில் குறித்த விடயங்களை பிரசுரிப்பதற்காக தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
10 வருடங்களுக்கு ஒருமுறை முன்னெடுக்கப்படும் குடிசன மதிப்பீடு 2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், இதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் என்ற ரீதியில் தலைமை அமைச்சர்  ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் பிரதி அமைச்சர் அஜித்பெரேரா , சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.