வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை 1883093802protest2விடுவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் ஆகிய சில கோரிக்கைகளை முன்வைத்து, முன்னிலை சோசலிசக் கட்சி உள்ளிட்ட சிவில் அமைப்புக்கள் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தின் முன்னாள் அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலுள்ள தமிழர்களின் காணிகளில் இன்னும் இராணுவத்தினரின் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதால், அம் மக்களின் காணி உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளன