downloadகூட்டுறவு திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டு.

தென்மராட்சி கிழக்கு ப.நோ.கூட்டுறவு சங்கம் தனது எல்லைக்குட்பட்ட கிராமங்களில் பெரும்போக நெல் செய்கையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை வருடந்தோறும் கௌ;வனவு செய்து வந்துள்ளது ஆனால் இவ்வருடம் தென்மராட்சி கிழக்கு ப.நோ.கூட்டுறவு சங்கம் உள்@ர் விவசாயிகளின் நெல்லை கொள்வனவு செய்யவில்லை என அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்
இது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
சங்கம் நெல் கொள்வனவு செய்யாத காரணத்தினால் குறைந்த விலைக்கே வேறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றோம். இதனால் நாம் நட்டம் அடைந்துள்ளோம் இச்சங்கத்திற்கு 28மில்லியன் ரூபா செலவில் யாழ்மாவட்ட செயலகத்தால் அரிசி ஆலையொன்றும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது சங்கம் நெல் கொள்வனவு செய்யாமையினால் வரணி, கச்சாய்,, உசன், மிருசுவில், எழுதுமட்டுவாழ், அல்லாரை ,மந்துவில்,விடத்தற்பளை முதலான பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாம் பெரிதும் நட்டமடைந்துள்ளோம் என கவலை தெரிவித்து உள்ளனர் . இது தொடர்பாக கூட்டுறவு திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் மேலும் குற்றம் சாட்டியுள்ளனர். .

(19.03.2017 வீரகேசரி)

உதவி ஆணையாளரிடம் விண்ணப்பிக்கப்பட்ட அனுமதி இழுத்தடிப்பு- தலைவர்

தென்மராட்சி கிழக்கு ப.நோ.கூட்டுறவுச் சங்கம் தமது எல்லைப்பரப்பிற்கு உட்;பட்ட விவசாயிகளின் நெல்லை தரமான விலைக்கு கடந்த வருடம் கொள்வனவு செய்துள்ளது. ஆனால் இவ்வருடம் கொள்வனவு செய்ய மேலதிகபற்று வசதியினை கூட்டுறவு திணைக்களம் வழங்காமையினால் கொள்வனவு செய்ய அனுமதி மறுக்கப்படடுள்ளது என சங்கத்தின் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்
சங்கத்தின் அரிசி ஆலைக்கு வருடாந்தம் 400,000 கிலோ நெல் தேவையென்றும் இதற்காக நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது . மேலும் நெல்கொள்வனவிற்கு சங்கத்தின் நிலையான வைப்பிற்கு எதிராக வங்கி மேலதிகபற்று வசதி பெற்று நெல்லினை கொள்வனவு செய்து அரிசியாலையினை செயற்படத்தி வந்துள்ள தாகவும் இந்நிலையில் காலபோக நெற் கொள்வனவினை மேற்கொள்ள இவ்வருடமும் வழமை போல் வங்கி மேலதிகபற்று வசதிக்கு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரிடம் விண்ணப்பிக்கப்பட்ட அனுமதி இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருகின்றது என்றும் தற்சமயம் நெல் கொள்வனவு செய்யும் வேளையில் பன்னிரண்டு இலட்சம் ரூபாவுக்கு மேலதிகமான நிதியை செலுத்த வேண்டிய நிலை சங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.
அத்தோடு அரிசியாலைக்கு செலவிட்ப்பட்ட 28 மில்லியன் ரூபா நிதி முடக்கப்பட்டுள்ளது. இதனால் இந்நிதியை மீளப்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் மக்களுக்கு தொடர்ந்து தரமான சேவையை வழங்க முடியாத நிலை ஏற்படடுள்ளதுடன் அரிசியாலை பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பும் தொடர்ந்து வழங்கமுடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக கூட்டுறவு அமைச்சருக்கு முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளதாயும் தெரிய வருகின்றது.

(21.03.2017-வீரகேசரி)