suguயுத்தத்திற்குபிந்திய இலங்கையின் சமூகபொருளாதாரவாழ்வை இந்த 7 வருடங்களில் மிகச் சிறப்பானதாகமாற்றியிருக்கமுடியும்.  ஜனநாயகம் மனிதஉரிமைதொடர்பான சீர்திருத்தங்கள் வெளிப்படையான நிலைப்பாடுகளுடன் சமூகபொருளாதார உச்சங்களைநோக்கி பயணப்பட்டிருக்கலாம்.

இன சமூகங்களுக்குஅதிகாரங்களைபகிர்ந்தளித்து சமூகங்களை இணக்கநிலைக்கு கொண்டுவந்திருக்கலாம்.  துரதிஸ்டவசமாக குறிப்பிடத்தகுந்தவிதமாக எதுவும் நிகழவில்லை.  இனமேலாதிக்கம்- வெறுப்பு- குரோதம் என்பன தீவிரமடைந்துள்ளன.  இலங்கையின் நாடாளுமன்றத்தில்  சமூகம் சார் பிரச்சனைகள் தொடர்பான செயற்பாடுகள்  பலவீனமாகவே இருக்கின்றன.

அரசியல் அமைப்புபேரவையாக பாராளுமன்றம்  மாற்றப்பட்டதிலிருந்து இன்றுவரை சீர்திருத்தங்களை பாராளுமன்றத்தில் அல்லது மக்கள்  முன்வைப்பதில்  அவநம்பிக்கைகள் தலைதூக்கியுள்ளன.  30 ஆண்டுகளுக்கு மேற்பட்டபேரழிவின் பின்னரும் முதிர்ச்சி அற்றபக்குவமற்ற அரசியல் ஆதிக்கம் செலுத்தகிறது.

குறைநத் பட்ச சமூககரிசனை இல்லாததே இங்குஉண்மையானகுறைபாடாகும்.  அதிகாரமா மக்களா என்றுவரும் போது எந்த அறமற்றவழியிலும் நீண்டகுறுகியகாலத்திற்கு அதிகாரத்தை அடைவதற்கான அவாவே தூக்கலாக இருக்கிறது. மக்களுக்காக அதிகாரம் என்பதுவேறு.  இங்குதமக்கான அதிகாரம் தனிப்பட்டசொந்தசௌகரியங்கள் ஊழல்  மோசடி செய்வதற்கான வெகுஜனங்களை அதட்டிவைப்பதற்கான அதிகாரம். தமிழ் அதிகாரமும் இதற்குவிதிவிலக்கல்ல.

யுத்தத்திற்கு பிந்திய உள்ள+ராட்சிசபை- மாகாணசபை பாராளுமன்றவரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் ஊடாக எத்தனையோ  ஆக்கபூர்வமானகாரியங்களை ஆற்றியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. பயங்கரவாததடைச்சட்டத்தை நீக்குவது  இராணுவமயமாகிவிட்ட மக்களின ்நிலங்களைமீட்பது அரசியல் அதிகாரங்களை பகிர்ந்துகொள்வதில் மாத்திரமல்ல

தற்போது காணப்படும் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுக்குள்ளேயே பாரிய அளவிலான் காரியங்களை ஆற்றியருக்கமுடியும். ஆற்றியிருக்கவேண்டும்.

குடிநீர்

விவசாயம் தொழில் துறை இதர அன்றாடபாவனைகளுக்கான நீர் சிறந்த சுகாதார வசதி ஆரம்ப இடைநிலைஉயர்கல்வி பெண்கள் தலைமைதாங்கும்  குடும்பங்களுக்கான பாதுகாப்பான வாழ்க்கை பொதுவெளியில் அன்றாடம் நிகழும் வன்முறைகளுக்கு முடிவுகட்டுவது சிறப்பானசௌகரியமானஉள்ள+ர் வெளியிடபொதுப்  போக்குவரத்தைவிருத்திசெய்வது. இளையதலைமுறையினர் படித்தவேலையற்றவர்களுக்கான தொழில்களுக்கான வழிகாட்டல். தொழிற்பயிற்சிநெறிகள்

அரசகாரியாலயங்கள் பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் மனிதகண்ணியத்திற்கான இடைவெளியை உருவாக்குவது. சுத்தமான நகரங்களையும்  கிராமங்களையும் – சுகாதாரமான ரம்மியமான கழிப்பிடவசதிகளை உருவாக்குவது சேவைத்துறைகள் சேவைத்துறையாக இங்கிதமாகமக்களுடன் நடந்துகொள்வதற்கானநிலைமைகளைஏற்படுத்துவது  பாரம்பரியதொழில்களான மீன்பிடிவிவசாயம் போன்ற துறைகளை நவீனமயப்படுத்துவது. தொழில் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவது. புதியதொழில் துறைகளைகட்டி எழுப்புவது.  இதற்கெல்லாம்  எங்கேபோவது என்று கேட்கலாம்.

ஒருமில்லியனுக்கு மேற்பட்ட புலம்யெர் தமிழர்கள் இருக்கிறார்கள். பிரமாண்மான அண்டைநாட்டில் பல்வேறுமாநிலங்களில்  பல்வேறுசிறப்புக்கள் வெற்றிகரமான அனுபவங்கள் காணப்படுகின்றன. விவசாயம் மருத்துவம்  கல்வி தொழில் நுட்பம் என இறைந்த ுகிடக்கின்றன.

இந்தஅனுபங்கள் ஒருங்கிணைக்கப்பட்டால் நாம் சமூகசாதகமான           சாதனைகளை நிகழ்த்தமுடியும். சகசமூகவெறுப்புக்களைக்  களைந்து ஒத்துழைப்புடன் செயற்பட்டால் மிகச் சிறப்பானவாழ்க்கை நிலையை ஏற்படுத்தமுடியும் .

ஒன்றையொன்று நிரப்பக் கூடிய உயர்ந்த பண்பாட்டம்சங்கள் காணப்படுகின்றன. இலங்கையில் தன்னம்பிக்கை நிறைந்தமகிழ;ச்சியான வாழ்வை ஸ்தாபிக்கமுடியும். ஆனால் எமதுமனங்களில் இருள் மண்டிக்கிடக்கிறது  குரோதம் விரோதம் புரையோடிப் போய்க் கிடக்கிறது. இந்த இருள் என்றுநீங்குகிறதோதான் எமக்குவிடிவு.  செய்யக் கூடியகாரியங்களை நாம் செய்யவில்லை.  13 வதன் கீழ் நிலம் பொலிஸ்  உட்பட 300க்கு மேற்பட்டநியதிச் சட்டங்கள் மாகாணசபையால் நிறைவேற்றப்பட்டாகவேண்டும். இவற்றை நிறைவேற்றினால் பரவலாக்கப்பட்ட இந்தவிடயங்கள் மீதுமத்தியஅரசாங்கம்  செயற்படமுடியாத நெருக்கடிநிலை உருவாகும். வேறுதிருகுதாளங்கள் நடக்காதென்றில்லை. ஆனால் சட்டபூர்வமானவற்றை முதலில் செயல்படுத்தமுயல்வோம். துரதிஸ்டவசமாக எமதுமாகாணசபைகள்  அதனைச் செய்யமுயலவில்லை.  அரசியல் யாப்புமற்றும் 13வது தொடர்பானஅனுபவமுள்ளஅறிஞர்கள் இதனைக் கூறுகிறார்கள். வன்முறையற்ற சட்டசீதியான கலகம் பிறந்தால் தானேநியாயம் பிறக்கும்”. சிராணிபண்டாரநாயக்கா இரண்டுசட்டவாக்கசபைகள் இலங்கையில் இருக்கின்றன என்று தீர்ப்புசொன்னதால் தானேஅவர் பதவியிழக்கநோந்;தது.  பிந்தியநிகழ்வுகள் நீதிமன்றத்தின சுயாதினம் பற்றிய கருத்துக்களை வலுவடையச்செய்தன. கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றல் அன்றிநாட்டத்தில் கொள்ளவேண்டும்.

சுகு- ஸ்ரீதரன்