timthumb.php

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அண்மைக்காலமாக தமிழரசுக்கட்சி தன்னிச்சையாக செயற்பட்டு வரும் நிலையில், ஆயுதப்போராட்டத்தின் வழிவந்த ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து பேசியுள்ளமை பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

குறித்த ஒன்றுகூடல் தொடர்பில் அதில் கலந்து கொண்ட பிரதிநிதி ஒருவரிடம் ஊடகவியலாளர் வினவிய போது “தாங்கள் ஒன்றுகூடி பேசியது உண்மை எனவும், அந்த ஒன்றுகூடலில் சமகால அரசியல் நிலைமைகள் குறித்து ஆராய்ந்ததாகவும், மாவட்ட ரீதியில் மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முடிவெடுத்துள்ளதாகவும், எதிர்காலத்தில் மாதாந்தம் இப்படியான ஒன்றுகூடல்கள் தொடருமெனவும்” குறிப்பிட்டதுடன் கலந்து கொண்டவர்களின் பெயர்களை குறிப்பிட மறுத்து விட்டார்.

மாற்றுத் தலைமை. கூட்டுத்தலைமை போன்ற கருத்தியல்கள் உருவாகியுள்ள நிலையிலும், புளொட்டுக்கு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட வடக்கு மாகாண சபையின் சுழற்ச்சிமுறை ஆசனம் தமிரசுக்கட்சியின் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதுடன் இந்த ஒன்றுகூடல் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படாமை பல ஊகங்களை ஏற்ப்படுத்தியுள்ளது.

இதேவேளை மேற்படி சந்திப்பு குறித்து, “குரல்தரவல்ல, புளொட் சர்வதேச முக்கியஸ்தர்களில்” ஒருவரிடம், “அதிரடி” இணையம் தொடர்பு கொண்டு கேட்ட போது, “எமது தலைவர் சித்தண்ணர் மென்மையான போக்கைக் கொண்டவர் என்பது உலகுக்கே தெரியும், எமது தலைவரோ, எமது புளொட் அமைப்போ, பொறுமை காப்பது தமிழ் மக்களின் நலன் கருதியே தவிர, வேறு எந்தவொரு காரணமும் இல்லை”.

“ஏனெனில் நாம் (புளொட்) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைக்கவோ, அன்றில் தமிழ் மக்களின் நலனைக் குழி தோண்டிப் புதைத்து விடவோ விரும்பவில்லை. நாம் எடுக்கும் சில நேர்மையான முடிவுகளினால், தமிழ் மக்களின் தீர்வுத் திட்டத்தையே குழப்பி விட்டார்கள் எனும் வீண் பழிச்சொல்லுக்கு உள்ளாக விரும்பாததினாலேயே நாம் பொறுமை காத்து வருகிறோம்”.

“அதேவேளை மக்கள் நலன் சார்ந்த எமது பொறுமையை, எமது இயலாமை என மற்றவர்கள் கருதினால், அது அவர்களின் அறியாமை” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இன்றைய சந்திப்பு குறித்த கேள்விக்கு “இதுவோர் மக்கள் நலன் சார்ந்த சாதாரண சந்திப்பு எனவும், எதிர்வரும் காலத்தில் மக்கள் நலன்சார்ந்த நேர்மையுடன் செயல்பட விரும்பும் ஏனையோரையும் இணைத்து சந்திப்போம்” எனவும் குறிப்பிட்டார்.