15218கிளிநொச்சி சேவையர்கடை சந்திக்கு அருகாமையில் நேற்று முற்பகல் இரண்டு முச்சக்கரவண் டிகள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் கருணாநிதி சின்னம்மா என்ற வயோதிபப்பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து முறிப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியை  சேவையர்கடை சந்திக்கு அருகாமையில்  உள்ள கடை ஒன்றிற்கு முன்னால் நிறுத்தி விட்டு சாரதி கடைக்கு சென்றுள்ளார்.
அவ்வேளையில் அதே திசை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த  மற்றுமொரு முச்சக்கர
 வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் பின்புறத்தில்  மோதியுள்ளது.
இதன்போது  நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி யின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த  வயோதிபப்பெண் படுகாயமடைந்துள்ளார்.
மயக்கமுற்றநிலையில் மீட்கப்பட்ட அவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சை க்காக கொண்டு செல்லப்பட்டார்.
எனினும் அங்கு அவர் இறந்த நிலையிலையே வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்  என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.