Kilinochchi-Iranitivu-People-Protest-3-தங்களது காணிகளை விடுவிக்குமாறு கோரி, கிளிநொச்சி, இரணைதீவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 நேற்று (09) காலை கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடைந்த அவர்கள், அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு செல்ல முற்பட்ட வேளையில், பாதுகாப்புக் கருதி பொலிசாரால் லோட்டஸ் வீதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
 தங்களது 150 வருட பூர்விக காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும், 182 குடும்பங்களின் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
 1992 ஆம் ஆண்டு காணப்பட்ட யுத்த சூழல் காரணமாக தாங்கள் அங்கிருந்து வெளியேறியதாகவும், தற்போது பூநகரி பிரதேச்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
101 நாட்களைக் கடந்துள்ள தமது போராட்டத்திற்கு ஜனாதிபதி உள்ளிட்ட நல்லாட்சி அரசாங்கம் தீர்வு வழங்கும் எனும் நம்பிக்கையில் 75 குடும்பங்களைச் சேர்ந்த 180 பேர் ஜனாதிபதி செயலகத்திற்கு வந்துள்ளதாக போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்தார்.