சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அகில இலங்கை ரீதியாக இடம்பெறவுள்ள இப்போராட்டம் இன்றும் (25), நாளையும் (26) இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இதனைத் தெரிவித்தார்.
வடமாகாணத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் கீழ் பணிப்புரிந்த பொது சுகாதார பரிசோதகர்கள் ஐவர், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை கண்டித்து அவர்களது உரிமைக்காக தாங்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அந்த வகையில், இன்றும் (25) நாளையும் (26) டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து பணிகளிலிருந்தும் தாங்கள் விலகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

PHI