pirathiதோழர் பிரதி  என எம்மால் அன்போடுஅழைக்கப்பட்ட இராயப்பு  பிரதீபன்  இந்த கிராமத்தின் பல குடும்பங்க ளைப்  போல,தனது குடும்பத்தினர்,உறவினர்கள் பலரைப் போல தமிழ் மக்களின்,தான் சார்ந்தசமூகத்தின் விடிவிற்காக  பங்களிப்புக்களைச் செய்தவர்.அவரும் அவரது குடும்பத்தினரும் பல்வேறு இன்னல்களுக்கும், இடம்பெயர்வுக்கும்,அகதிவாழ்க்கைக்கும் உள்ளான போதும் கடந்த 27 வருடங்களுக்கு மேலாக தனது நிலைப்பாட்டில் நம்பிக்கையோடு எம்மோடு கைகோர்த்து நின்றவர்.

மிக இளம் வயதில்,துடுக்குத் தனம் மிக்கவராக அறிமுகமாகிய அவர் இன்று ஒரு தொழிற் சாலையின் உரிமையாளராக, நல்லதந்தையாக உயர்ந்துநின்றார். இதனால் நாம் அனைவரும் அடைந்த மகிழ்ச்சி பறிபோகும் வகையில் அவரது மரணம் சம்பவித்திருக்கிறது. அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்,உறவினர்கள் மற்றும் நண்பர்களின் துயரத்தில் பங்குகொண்டு ஆழ்ந்த அனுதாபங்களை  தெரிவித்துக்கொள்வதோடு     அவருக்கு   எம் அஞ்சலியை  உரித்தாக்குகிறோம்.

        தமிழர் சமூக ஜனநாயக கட்சி  (SDPT)

pirathi12