FORT_STATION_COLOMBOரயில் சாரதிகள்  திடீர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதனால் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரயில்வே உதவியாளர்கள் ஆட்சேர்ப்பு நடைமுறையில் ஏற்பட்ட பிர்ச்சினைகளை முன்வைத்தே இவர்கள் இன்று(11) திடீர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பிரதமரின் ஆலோசகர் தடல்லகேவுடன் இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடல்  தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கைக்கு தாமும் ஒத்துழைப்பு வழங்குவதாக ரயில்வே பாதுகாப்பு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது