therthal-1-150x135நீதிமன்ற உத்தரவு காரணமாக தேர்தலை நடத்துவதற்கு தினம் அறிவிக்க முடியாதிருந்த 208 உள்ளுராட்சி சபைகளின் வேட்புமனுக்களை கோரும் தினம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியினால் குறித்த தினங்கள் இன்று முற்பகல் உள்ளுராட்சி மன்றங்களுக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டிசம்பர் 18 ஆம் திகதி தொடக்கம் வரையான காலப்பகுதியில் வேட்புமனுக்கள் கோரப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

குறித்த 208 உள்ளாட்சி மன்றங்களுக்காகவும் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை நாளை தொடக்கம் முன்னெடுக்கப்படும்.

இதுவரை தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்கள் 93 றினதும் வேட்பு மனு கோரும் பணிகள் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பித்து 14 ம் திகதி நண்பகல் வரை இடம்பெறும்.

வேட்புமனுக்கள் கோரப்பட்ட பின்னர் வாக்களிப்பு தினம் தொடர்பாக தேர்தல்கள் ஆணையகம் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.