மாற்று தலைமை தேவை என்ற அடிப்படையில் புதிய தலைமையில் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஜனநாயக தமிழரசு கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணி ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இன்று ( 06.12) காலை ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியைச் சேர்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ரெலோ கட்சியைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் உட்பட பலர் மூத்த அரசியல்வாதியும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான வீ. ஆணந்தசங்கரியுடன் சந்தித்து கலந்துரையாடினர்.

அந்த சந்திப்பின் பின் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் புதிய ஒரு கூட்டணி அமைத்து அந்த கூட்டணியின் ஊடாக தேர்தலை எதிர்கொள்வதற்குரிய பேச்சுவார்தைகளில் ஈடுபட்டனர்.

அந்த பேச்சுவார்த்தையின் போது, தற்போதைய சூழ்நிலையில் புதிய மாற்று அணி ஒன்று தேவை என்பதன் அடிப்படையில் புதிய கூட்டணியை உருவாக்கி அதன் மூலம் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆராய்ந்து கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.

அந்த கூட்டணியில், ஈழ மக்கள்புரட்சிகர விடுதலை முன்னணி, ஜனநாயக தமிழரசுக் கட்சி, ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்), புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள், சமூக சமத்துவத்தினை ஊக்குவிக்கும் பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புகளும் இணைந்து போட்டியிட முடிவெடுத்துள்ளன.

தற்போதைய மாற்றத்தின் அவசியத்தை உணர்ந்து இப்புதிய கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறும் புதிய கூட்டணியினர் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பொதுச் சின்னமாக உதயசூரியன்

தமிழரின் ஒற்றுமையை வலியுறுத்தி தமிழினத் தலைவர் தந்தை செல்வா உருவாக்கிய தமிழரசுக் கட்சியாலும் ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸாலும் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் சின்னமானஉதயசூரியன் சின்னத்தையே இப்புதிய கூட்டமைப்பு தனது பொதுவான தேர்தல் சின்னமாக ஏற்றுக்கொண்டுள்ளது. 1987556199new-party-north