தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தவிசாளராக இருந்த ஒருவர், நேற்று (10) ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டார்.

வவுனியாவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (10) காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே, அவர் இணைந்து கொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு, வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச சபை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் என்பவரே, இவ்வாறு இணைந்துகொண்டார்.

அத்துடன், அவருடன் அவருடைய ஆதரவாளர்களும் இணைந்து கொண்டனர்.

போரால் பாதிக்கப்பட்ட தமது பிரதேசத்தை, நான் தலைவராக இருந்த காலத்தில் அபிவிருத்தி செய்ய முடியவில்லை. அரசாங்கத்துடன் இணைந்து அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி வவுனியா வடக்கு பிரதேச சபையை கைப்பற்றும் எனவும் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

இதில், ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கருணாதாச, இணை ஒருங்கிணைப்பாளர் தம்பாபிள்ளை பிரமேந்திர ராஜா, மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

tna 2