உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 44ஆவது நினைவு தின நிகழ்வுகள், யாழில் இன்று  அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது, கடந்த 1974ஆம் ஆண்டு, யாழில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது, படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்  உட்பட பொது மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.