ஆனமடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லபுகல பிரதேசத்தில் தனியாருக்கு சொந்தமான  இடமொன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட 6 பேர்  ஆனமடுவ பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (10.01.2018) கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23, 24, 35, 38, 27, 31 மற்றும் 22 வயதானவர்கள் என்றும், இவர்களை இன்று ஆனமடுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.