இலங்கைப் பெண்கள் ஜப்பானில் தொழில் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய,  ஜப்பான் மொழியில் N4 மட்டத்தில் சித்தியடைந்த 18 தொடக்கம் 30 வயதுக்கிடைப்பட்ட யுவதிகள் விண்ணப்பங்களை அனுப்பலாமெனவும்,​வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் IM என்ற ஜப்பான் நிறுவனத்துடன் செய்துக்கொண்ட ஒப்பந்தத்துக்கு அ​மைய குறித்த வாய்ப்பு கிடைத்துள்ளதுள்ளதாகவும் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

பராமரிப்பு பணிகளுக்கு செல்ல விரும்பும் 100 யுவதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுமெனவும், ஜப்பான் செல்லும் யுவதிகளின் மாதாந்த கொடுப்பனவு 1,35,000 ரூபாய் வழங்கப்படவள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, இது தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற விரும்புபவர்கள் வௌநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ஊடாகவும், 0112- 2791814 என்ற அலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.