ஏ9 வீதியில் இரணைமடுப் பகுதியில்இன்று அதிகாலை  நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். டிப்பருடன் லொறி மோதியதாலே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இந்த விபத்தில் உயிரிழந்தவரின் விபரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.