தொழிநுட்பக்  கோளாறு காரணமாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம்  இன்று நண்பகல் 12.30 மணிக்கு தீப்பற்றி எரிந்தது.

கொழும்பில் இருந்து இன்று அதிகாலை 5.45 மணியளவில் யாழ். நோக்கி புறப்பட்ட அதிவேக
சொகுசு புகையிரதத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.கொழும்பிலிருந்த யாழ். நோக்கி வந்த இந்த புகையிரதம் யாழ் மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்திற்கு முன்னர்
பயணித்த போது புகையிரதத்தின் பின்பகுதியில் உள்ள இயந்திர பெட்டியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீப்பரவலின் காரணமாக புகையிரதம் சடுதியாக நிறுத்தப்பட்டதுடன், பயணிகளும் பாதுகாப்பாக
வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து, தீயணைப்புப் படையினர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு,
தொழிநுட்ப கோளாறு சீராக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளியேற்றப்பட்ட பயணிகள் பேருந்துகளில் அவர்களது இடங்களுக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.