ஜனவரி 22ஆம் திகதிக்குப்பின்னர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

சைட்டம் பிரச்சனை உள்ளிட்ட 9 காரணங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு கூட்டத்திலேயே இது குறித்து தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“ பணிபகிஸ்கரிப்பை முன்னெடுக்காமல்  இந்தப் பிரச்சனைக்கு தீர்வினைப் பெறுவதற்கு எங்களுக்கு பல சந்தர்ப்பங்கள் காணப்பட்டாலும், அதிகாரிகள் எங்களை பணிபகிஸ்கரிப்பிற்கே செல்லச் சொல்கின்றனர்” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.