யாழ். மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு முன்பாக இன்று இடம்பெற்ற  விபத்தில் புகையிரத பாதையில் புல் மேய்ந்து கொண்டிருந்த இரு பசுமாடுகள் புகையிரதத்துடன் மோதுண்டு பல மீற்றருக்கப்பால் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை,  பாடசாலை மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளார்.   தூக்கி வீசப்பட்ட பசுக்களிலொன்று மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு முன்பாக நின்றிருந்த  மாணவியுடன் மோதி விழுந்தது. இதனால்,  யாழ். மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த மாணவி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை
பெற்று வருவதாகவும் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.