மன்னார் சிலாவத்துறை பகுதியிலிருந்து 15.4 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய 154 கிலோ கிராம் நிறையுடைய கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 3 சந்தேக நபர்களை இன்று (07) கைது செய்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை, விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.