இது ஒரு EPRLF இன் செய்தி மற்றும் கருத்துக்களை தெரிவிப்பதற்கானஇணையத்தளமாகும். ஜனவரி 2011   இல் இருந்து 

இவ்விணையத்தில்  செய்திகள் பதிவிடப்படுகின்றன.

 எமது நோக்கங்கள்:

  1. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சமூக அரசியல் பெருளாதார விடயங்கள் பற்றிய செய்திகளை வழங்குதல்.
  2. அரசியல்தீர்வு தொடர்பான  செயற்பாடுகளையும்  அபிப்பிராயங்களையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  3. எமது கட்சி தோழர்கள் மத்தியிலும், அரசியல் ஆர்வமுள்ளவர்கள் மத்தியிலும் கருத்து பரிமாற்றத்திற்க்கான  தளம் ஒன்றை வழங்குதல்.
  4. வடக்கு கிழக்கு அரசியல் வரலாற்றில் EPRLF இன் பங்கு பற்றிய குறிப்புக்களை பதிவிடுதல்.

 

இந்த இணைய வடிவமைப்பில் முக்கியமான மூன்று அம்சங்கள்:

  1. செய்திகள் கருத்துக்கள் பற்றிய உங்கள் எண்ணங்களை நீங்கள் செய்திகளுக்கு பின்னால் பதிவிடல்லாம். இது ஒரு ஆரோக்கியமான கருத்து பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும்.
  2. இவ்விணையத்தின் வலது பக்க நிரலில் EPRLF  இன் twitter சமூக இணையம் ஊடாக பிற ஊடக செய்திகளும் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரே இடத்தில் செய்திகளை பார்ப்பதற்கான ஏற்பாடாகும். EPRLF இன் முகப்புத்தகம் (facebook) ஊடாகவும் முக்கிய செய்திகள் வெளிக்கொணரப்படுகின்றன.
  3. அவ்வப்போது ஒலி, ஒளி வடிவத்திலும் செய்திகள், கருத்துக்கள் தரவேற்றம் செய்யப்படும்.

 இணைய ஊடகத்தின் காத்திரமான பயன்பாடு    வாசகர்களும்  கருத்துக்களை    பதிவிடக்கூடிய வசதி இருப்பதாகும். அந்த வகையில் உங்களது பங்களிப்பு இவ்விணையத்தை பயனுள்ளதாக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

– ஆசிரியர் குழு